தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

Wednesday, March 30th, 2016
கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலய பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் நேற்று(29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியினை சேர்ந்த 24 வயதான சின்னராசா மகிந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். கோண்டாவில் தில்லையம்பதி அம்மன் ஆலயத்தின் பின் வீதிப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றிலிருந்தே குறித்த நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்.நீதிமன்ற நீதிபதி எஸ்.சதீஸ்தரனின் உத்தரவுக்கு அமைய சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு  பிரேத பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும், குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். அத்துடன், சடலமாக மீட்கப்பட்டவரின் உடலில் ஏழு இடத்தில் காயங்கள் இருப்பதாக அந்த பகுதி மக்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: