துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை உயர்நீதிமன்றில் முன்னெடுப்பு!

Monday, April 19th, 2021

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உயர்நீதிமன்றம் இன்றையதினம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, முர்து பெர்ணான்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் மனுக்கள் ஆராயப்பட்டன.

நாடாளுமன்ற அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவிக்கக் கோரி ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி, ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: