துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் உயர் நீதிமன்ற வியாக்கியானம் நாளை அறிவிப்பு!

Monday, May 17th, 2021

நாடாளுமன்ற அமர்வு நாளை செவ்வாய்க்கிழமைமுதல் வியாழக்கிழமைவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இடம்பெறவுள்ளது.

அமர்வின் போது துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு பிரேரணை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கிய வியாக்கியான விளக்கங்களை சபாநாயகர் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளார்.

அதனையடுத்து இந்த ஆணைக்குழு பிரேரணை தொடர்பில் விசேட விவாதம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தொடர்ந்து இடம்பெறும். அந்தத் தினங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தனிப்பட்ட கேள்வி நேரம் ஒதுக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நிதிச் சட்டத்தின் கீழ் வரும் இரண்டு கட்டளைத்திருத்தங்கள், துறைமுக விமான நிலைய அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வரும் கட்டளை பிரேரணை தொடர்பிலும் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அனுமதி கிடைக்குமானால் அடுத்த12 மணித்தியாலங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க தயார் - இராஜாங்க...
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ...
அரசாங்கத்துக்கு எதிராக அவநம்பிக்கைப் பிரேரணை - புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என இராஜாங்க...