துறைமுக நகர நிர்மாண பணிகளில் சிங்கப்பூர் நிறுவனம்?

Sunday, August 21st, 2016

கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளை சீனாவுக்கு கையளிக்கும் முன்னர் அதனை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.

குறித்த நிறுவனமே சிங்கப்பூரின் துறைமுக நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனமாகும். எனினும் குறித்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் இந்த திட்டம் கையளிக்கப்பட்டால் அது இலங்கைக்கு வாய்ப்பாக இருக்காது என்ற அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு கைமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிங்கப்பூர் நிறுவனம் இதனை பொறுப்பேற்றிருக்குமானால், சுற்றாடல் விடயத்தில் சிறந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: