துறைமுக நகரில் டிஜிட்டல் பணத்தை பயன்படுத்த அனுமதி – துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!
Wednesday, December 8th, 2021டிஜிட்டல் பணம் எனப்படும் கிறிப்டோ கரன்சியை கொழும்பு துறைமுக நகருக்குள் பயன்படுத்த அனுமதி வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரின் விசேட பொருளாதார பிராந்திய நிர்வாக ஆணைக்குழுவின் தலைவர் சாலிய விக்ரமசூரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
துறைமுக நகர சூழலில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் களியாட்டு சம்பந்தமான செயற்பாடுகளில் இந்த கிறிப்டோ கரன்சியை உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களும், டிஜிட்டல் நாணயமும் துறைமுக நகரில் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனவும் சாலிய விக்ரமசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே கிறிப்டோ கரன்சியை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு தேவையான பரிந்துரைகளை முன்வைக்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதுடன் அதற்காக விசேட குழுவையும் நியமித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|