துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு பரிந்துரை!
Friday, October 27th, 2023கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் வர்த்தக நிறுவனங்களின் ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்தை நான்கு வாரங்களுக்குள் வழங்குமாறு அரச நிதி தொடர்பான குழு பரிந்துரைத்துள்ளது.
அரச நிதி தொடர்பான குழு அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடியபோது இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு அரச நிதி தொடர்பான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகரத்தில் செயற்படும் 10 வர்த்தக நிறுவனங்கள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அவற்றின் ஒப்பந்தங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் எந்த சட்ட அடிப்படையிலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பான சட்டமா அதிபரின் கருத்தை 4 வாரங்களுக்குள் அரச நிதி தொடர்பான குழுவுக்கு தெரிவிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|