துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி அறிவிப்பு!
Sunday, January 31st, 2021துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பிரகடனப்படுத்தியுள்ளார்.
அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக இந்தியாவுடனான உத்தேச ஒப்பந்தத்தை இரத்து செய்யக் கோரி துறைமுகத் தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதால் ஜனாதிபதியின் புதிய உத்தரவு வந்துள்ளது..
கொரோனா தொற்றுநோய் கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகளை சீர்குலைத்தபோது, நவம்பர் 17 ஆம் திகதி ஜனாதிபதி துறைமுக அதிகார சபையை அத்தியாவசிய சேவையாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு பின்னர் இரண்டாவது தடவையாக கொழும்பு துறைமுக அதிகாரசகைப பணிகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|