துறைமுக அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பூரண ஒத்துழைப்பு!

Saturday, February 23rd, 2019

இலங்கை துறைமுக அதிகார சபையால் 2050 ஆம் ஆண்டு வரையில் திட்டமிடப்பட்டுள்ள தேசிய அபிவிருத்தி முதற்கட்ட ஆய்வின் பின்னர், கொழும்பு துறைமுக அபிவிருத்தி செயற்பாடுகளிற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக துறைமுகம் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொள்கலன்கள் செயற்பாட்டினை அதிகரித்து கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்திச் செய்யும் திட்டத்தின் கீழ் கொழும்பு தென் துறைமுகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தில் தற்போது ஒரு கப்பல் மாத்திரம் பிரவேசிக்கும் நிலை இருப்பதாகவும் இம்முனையத்தை விரிவுபடுத்துவதன் மூலம், முனையத்தினுள் மூன்று கப்பல்கள் வருகை தரும் வகையில் அபிவிருத்தி செய்யப்படும்..

கொழும்பு மேற்கு முனையத்தை அபிவிருத்திச் செய்வதன் மூலமாக, (Liquid Natural Gas) முனையமொன்றை அமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது. ஒலுவில் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக அபிவிருத்தி செய்ய இயலாதுள்ளமையால், அதனை மீன்பிடி துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு கடற்றொழில் அமைச்சிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும் இத்துறைமுகத்தை சுற்றி கைத்தொழில் பேட்டையொன்றை அமைப்பதற்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: