துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை – விசாரணைக்கு அமைச்சர் குணவர்த்தன பணிப்பு!

Saturday, September 11th, 2021

இலங்கை துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன்கள் வெள்ளைப்பூண்டுகளை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்தமை தொடர்பிலான விசாரணையை முன்னெடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சதொச உயர் நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி, இரு கொள்கலன்களும் கடந்த வியாழக்கிழமை மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை உடனடியாக இடைநீக்கம் செய்யுமாறும் அமைச்சர் குணவர்தன உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் அளிக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டதாகவும் வர்த்தக அமைச்சு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: