துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் – அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம!
Monday, October 23rd, 2017ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகாமையில் புதிதாக 30 தொழிற்சாலைகள் அமைக்கப்படுமென்று விசேட பணிப்பொறுப்புக்களுக்கான அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம மேலும் தெரிவிக்கையில் இதற்கு மேலதிகமாக, தென் மாகாணத்தை உள்ளடக்கிய வகையில், முன்னணி பயிற்சி மத்திய நிலையமொன்றும் அமைக்கப்பட உள்ளது. மத்தள விமான நிலையத்திற்கு அருகாமையில் உலகின் முன்னணி விமான சேவை மத்திய நிலையமொன்றும் அமைக்கப்படவுள்ளது. விமான சேவைப் பயிற்சி நிலையமொன்றையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விமானங்களைப் புதுப்பிப்பதற்கான மத்திய நிலையமொன்று இந்த வலையத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்;.
Related posts:
மழைக்காலப் பயிர்ச்செய்கையை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு!
குண்டுத் தாக்குதலின் எதிரொலி: சகல மே தின கூட்டங்களும் இரத்து - அமைச்சர் அகிலவிராஜ்!
இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
|
|