துறைநீலாவணை சந்தை விடயத்திலும் மக்களை மாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

மட்டக்களப்பு துறை நீலாவணைப் பகுதியிலுள்ள சந்தை பலவருடகாலமாக இயங்காத நிலையில் உள்ளதாகவும், இதனைமீளவும் இயங்கவைப்பதில் தமது வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அக்கறைகாட்டாமை இருக்கின்றமையானது தமக்கு மிகுந்த வேதனையை தருவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
துறைநீலாவணைப் சந்தையானதுகடந்த 40 வருடகாலமாக இயங்காதநிலையில் அப்பகுதில் வாழ்ந்துவரும் மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கானபொருட்களைகொள்வனவுசெய்யும் பொருட்டுபலமைல்கள் தூரத்திற்கு பயணிக்கவேண்டிய துர்ப்பாக்கியத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
தேர்தல் காலங்களின்போது தாம் வெற்றிபெறும் பட்சத்தில் குறித்தசந்தையை மீள இயங்கவைப்பதற்கு துரிதமான நடவடிக்கை எடுக்கப்படுமென கூட்டமைப்பினர் வாக்குறு திவழங்கி மக்களின் வாக்குகளை அபகரித்திருந்தனர்.
ஆனால் தேர்தலில் வெற்றியை தமதாக்கிக் கொண்ட கூட்டமைப்பினர் குறித்தசந்தையை மீள இயங்க வைப்பதற்கு இதுவரையில் எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை யென்று மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச்சந்தைக்கான கட்டிடம் பாரிய சேதங்களுக்கு உள்ளான நிலையில் தற்போது பற்றைகள் வளர்ந்து, குப்பைகள் கொட்டும் இடமாகமாறியுள்ளதாகவும், தமது உள்ளூர் உற்பத்திகளையும், முடிவுப் பொருட்களையும் சந்தைப்படுத்துவதில் பாரிய இடர்பாடுகளை தாம் நாளாந்தம் எதிர் நோக்கிவருவதாகவும் விவசாயிகளும் மக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் துறைநீலாவணைச் சந்தையை மீளவும் இயங்கவைப்பதற்கு மக்களின் வாக்குகளை அபகரித்திருந்த கூட்டமைப்பினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே இப்போது விடைகாண முடியாதவினாவாக உள்ளது.
Related posts:
|
|