துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!
Saturday, December 17th, 2022நாடாளுமன்றத்தில் அமைக்கப்படவுள்ள துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் 17 விடயங்கள் தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுக்கள் நிறுவப்பட உள்ளன.
05.10.2022 அன்று நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட நிலையியற் கட்டளைகளின் விதிகளின்படி விசாரணைகளுக்கு உதவுவதற்காக ஒரு குழுவிற்கு தலா ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
விண்ணப்பதாரர்கள் அந்தந்த குழு விடயங்களில் உண்மையான அறிவு/தொழில் அனுபவம்/திறமை பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பங்கள் முடிவடையும் திகதியின்படி விண்ணப்பதாரர்கள் 18 வயதுக்கு குறைவாகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
மேலும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இது தொடர்பான அனைத்து விபரங்களுடனும் பத்திரிகை விளம்பரங்களை வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரியின்படி தயாரிக்கப்பட்ட விண்ணப்பங்கள், “பாராளுமன்றச் செயலாளர், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே” என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
கல்வி/தொழில்முறை மற்றும் அனுபவ சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 2023 ஜனவரி 09 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுதப்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|