துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் !

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு துருக்கியின் வெளிவிவகார அமைச்சரான மெவுலட் கெவுசொக்ளு இன்று மாலை 4.30 மணிக்கு இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
11 பிரதிநிதிகளுடன் விசேட விமானத்தின் மூலம் இலங்கையை அவர் வந்தடைந்துள்ளார். குறித்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மற்றும் சபாநாயகர் போன்றோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனி அனைத்துமே சொந்த செலவுதான்!
சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றினால் ஆர்ப்பாட்டங்களை தடுக்க முடியாது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெர...
அனைத்து அரச மற்றும் தனியார் துறைகளையும் உள்ளடக்கி நிலையான பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகப்படுத்தப்படும...
|
|