துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகி இவ்வருடம் 54 பேர் பலி!

Thursday, December 27th, 2018

நேற்று முன்தினம் மற்றும் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் உட்பட இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 54 பேர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களாக கொழும்பு கிரேன்பாஸ் – ஹேனமுல்ல வீட்டுத்திட்டத்திற்கு முன்னால் நேற்று காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதுடன் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை தங்காலை – குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: