துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி மரணம்!

Tuesday, July 3rd, 2018

பொலிஸ் அதிகாரி ஒருவர் யாழ். மல்லாகம் பகுதியில் இன்று பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு காரணமாக உயிரிழந்துள்ளார்.

தற்கொலை செய்யும் நோக்கிலேயே அவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் அதிகாரி கடமையிலிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் திருகோணமலையை சேர்ந்த நஸீர் (25 வயது) என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts: