துப்பாக்கிச் சூடு – திருமலையில் இருவர் படுகாயம்!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (03) அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஏ.அஸ்மி (17வயது) ஐ.அஸ்கான் (21வயது) ஆகிய இருவருமே காயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மோட்டார் சைக்கிளில் இருவரும் பயணித்துக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம் பெற்றதாகவும் காயம் அடைந்த இருவரும் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை சிகிச்சை பெற்று வருகின்றனர்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் குச்சவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
புங்குடுதீவில் பொலிஸ் நிலையம் தேவை! - நீதிமன்று
நாட்டில் இதுவரை முட்டைகள் இறக்குமதி செய்யப்படவில்லை - பொய்யான செய்திகளே பரவுகின்றன என வர்த்தக அமைச்ச...
அஸ்ட்ராஜெனிக்கா தடுப்பூசி விவகாரம் - உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறப்பட்டது!
|
|