துன்புறுத்தப்பட்ட குழந்தையை தத்தெடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மாரின் அழைப்பு!

Friday, March 12th, 2021

யாழ்ப்பாணம் மனியந்தோட்டத்தில் அண்மையில் தனது 08 மாத குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையை தத்தெடுப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதேபோல வெளிநாடுகளிலும் இருந்து இவ்வாறு தொலைபேசி அழைப்புக்கள் கிடைத்ததாக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் இல்லாத பெற்றோரே இவ்வாறு அந்தக் குழந்தையை பொலிஸாரிடம் கேட்டுள்ளனர். குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்தவர்களே இவ்வாறு குழந்தையை தத்தெடுப்பதற்குக் கோரியிருப்பதாக தெரியவந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: