துன்னாலையில் கோஷ்டி மோதல்! நால்வர் வைத்தியசாலையில்!

Thursday, June 30th, 2016

யாழ். வடமராட்சி, துன்னாலை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று  மாலை இரு பகுதியினருக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இரு பகுதியினரும் மோதிக்கொண்டதாகவும் இதில் துன்னாலை கிழக்கைச் சேர்ந்த தம்பிராசா தங்கராசா (வயது – 36) அவரது இரு பிள்ளைகளான தங்கராசா தர்சன் (வயது 18), தங்கராசா தர்சனா (வயது 12) மற்றும் இராசேந்திரம் இந்திரா (வயது 55) ஆகியோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டன்கள், கத்திகள் கொண்டு மோதிக்கொண்டதாகவும் சிலர் அடிகாயங்களிற்கு உள்ளான நிலையிலும் சிலர் வெட்டுக் காயங்களிற்கும் உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: