துதிபாடுவதற்கு இடமில்லை – ஜனாதிபதி
Monday, March 20th, 2017மன்னர்களுக்கு முன்னால் துதிபாடும் அரசியல் சம்பிரதாயத்திற்கு எதிர்காலத்தில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சரியான நோக்கமும், கொள்கையும் வேலைத்திட்டமும் இல்லாமல் அரசியல் அமைப்பாக முன்னோக்கி செல்ல எவருக்கும் முடியாது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் சாஸ்த்ராலயத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அனுபவம், அறிவு மற்றும் புரிந்துணர்வோடு செயற்படும் அரசியல் அமைப்பு ஒன்றை ஏற்படுத்த இவ்வாறான அரசியல் கல்விப்பீடம் ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அனுபவம் இன்மையே தூய்மையான அரசியல் அமைப்பு ஒன்றை கட்டியெழுப்புவதில் உள்ள பிரதான சவாலாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல இளம் அரசியல்வாதிகளுக்குள்ளும் கட்சியின் கொள்கை பற்றி புரிதல் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|