தீவுப் பகுதி வறட்சிநிலை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா!

Thursday, December 8th, 2016

யாழ்ப்பாணம் தீவுப் பகுதி வறட்சி நிலைமை குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு – செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் இன்று புத்தசாசன அமைச்சு, தபால் மற்றும் முஸ்லிம் அலுவல்கள் தொடர்பான அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றிற்கான நிதி ஒதுக்ககீட்டு குழுநிலைவிவாதம் தற்போது நடைபெறுகின்றது. இதில் உரையாற்றுகையிலேயே ஆவர் இவ்வாறு தெரிவித்தார். –

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் ,

வறட்சி ஏற்படும் பொழுது அதனை எதிர்கொள்ளக்கூடிய வழிவகைகள் பற்றி ஆராய்வதற்கான அமைச்சரவை உபகுழு நாளை கூடுகிறது என்று தெரிவித்த அமைச்சர் கடந்த காலத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் மக்கள் மாத்திரமன்றி விலங்குகளும் பாதிக்கப்பட்டன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் 25 மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்தை அரசாங்கம் மேற்கொண்டது என்றும் அமைச்சர் கூறினார்.

அரசாங்கம் இடர்காப்பு முகாமைத்துவம் பற்றிய தேசிய திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. இந்த திட்டம் 2030 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இடர்காப்பு முகாமைத்துவச் சட்டம் திருத்தப்படவுள்ளது. இடர்களால் விளையும் பாதிப்புக்களை முடிந்த அளவு குறைத்து நிலைபேறான அபிவிருத்தியை சாத்தியப்படுத்துவதற்காக சகல அமைச்சுக்களுடனும் இணைந்து பணியாற்றப் போவதாக அமைச்சர் கூறினார்.

குறித்த விடயம் தொடர்பாக இன்றையதினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

arura

Related posts: