தீவிரம் அடையும் கொரோனா : ஒரு நோயாளியால் 406 பேருக்கு பரவு வாய்ப்பு – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Monday, March 23rd, 2020

இலங்கையில் கொரோனா வைரஸ் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற ஆலோசனைகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என சங்கத்தின் தலைவர் வைத்தியர் அனுருந்த பாதெனியா குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 எனும் கொரோனா தடுப்பு பிரிவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளுக்கமைய இந்த வைரஸ் தொற்று மிக வேகமாக பரவ கூடும். ஒரு நோயாளியினால் ஒரு மாதத்திற்குள் 406 பேருக்கு பரவ கூடும் என பாதெனியா குறிப்பிட்டுள்ளார்.

Related posts: