தீவகத்தை வளமான தேசமாக்க முழுமையான அரசியல் பலத்தை தாருங்கள் – வேட்பாளர் ஜெயகாந்தன்!

எமது வறண்ட பூமியை வளமானதாக உருவாக்கவும் தீவக மண்ணின் முழுமையான அபிவிருத்திக்கும் எம்முடன் ஒருமித்துக் கைகோருங்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரும் ஊர்காவற்றுறை பிரதே சபை தவிசாளருமான மருதயினார் ஜெயகாந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
வேலனையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று இடம்பெற்ற தீவக தொகுதியின் வேலணை, ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேசங்களின் வட்டார செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் –
தீவக மண்ணை அனைத்து வழிகளிலுமிருந்து பாதுகாத்து இங்குள்ள மக்களின் எதிர்காலத்திற்கு இதுவரை அதிகளவான சேவைகளை எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றியிருக்கின்றார்.
ஆனாலும் நாம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நகர்வுகளையும் முழுமையாக மேற்கொள்வதற்கு அரசியல்பலம் எம்மிடத்தே போதுமானதாக இல்லாதிருந்துவருகின்றது.
இந்த நிலையை இம்முறை நடைபெறவுள்ள தேர்லில் மாற்றியமைத்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கரத்துக்கு அரசியல் பலத்தை அதிகரிக்க செய்ய நீங்கள் ஒவ்வொருவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் ஆழைப்பு விடுத்திருந்தார்.
Related posts:
|
|