தீவகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஊர்காவற்றுறையில் வேட்பாளர் புவி!

மக்களோடு மக்களாக நின்று தீவகத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியவர் டக்ளஸ் தேவானந்தாவே என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவே என ஊர்காவற்றுறை பிரதேச உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வேட்பாளர் புவி தெரிவித்துள்ளார்.
ஊர்காவற்றுறையில் இன்றையதினம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
தீவகம் ஒரு காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த போது தனது அதிக உழைப்பினால் ஊர்காவற்றுறையை மட்டுமல்லாது முழுத் தீவகத்தையும் அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தியிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா.
தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தமது வெற்றியை மட்டும் இலக்காகக் கொள்ளும் ஏனைய தமிழ்க் கட்சிக்காரர்கள் எங்களிடம் வந்து பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வெற்றிபெறுகின்றார்கள். அவ்வாறு வெற்றிபெறும் இதர கட்சிகளால் மக்கள் அடைந்துகொள்வது பெரும் ஏமாற்றமே மட்டுமே.
ஊர்காவற்றுறை பல்வேறு துறைகளில் இன்று எழுச்சியும் வளர்ச்சியும் பெற்றுள்ளது என்றால் அதற்கு காரணகர்த்தாவாக திகழ்பவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவே என்பதுடன் அதில் வேறு யாரும் உரிமை கூறமுடியாது என்பதும் வரலாற்று உண்மை.
இங்குள்ள சந்தைக் கட்டடமானாலும் சரி வீதிப் புனரமைப்பானாலும் சரி மின் விநியோகத்திட்டமானாலும் சரி டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலின் பெயரிலேயே நடந்தேறியுள்ளன.
நாங்கள் சிறந்த அரசியல் தலைமையை கொண்டுள்ளவர்கள் என்ற வகையில் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலுடனும் ஆலோசனையுடனும் மீண்டும் ஊர்காவற்றுறை பிரதேச சபையை கைப்பற்றி எமது மக்களுக்கான சேவைகளை வழங்கவதற்கு நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம் – என்றார்.
Related posts:
|
|