தீவகத்தில் குவிந்துள்ள அரிய பறவைகள் !

Wednesday, July 10th, 2019

தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி ,வேலணை, மண்டைதீவு, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இவைகள் வந்துள்ளன.வருகை தந்துள்ளன.

இந்நிலையில் வெளிநாட்டிலிருந்து வரும் குறித்த பறவையினங்களை ரசிப்பதற்காக பலரும் அங்கு வருவதோடு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி பெப்ரவரி மாதம் கூடு கட்ட துவங்கும். குறித்த பறவைகள் 3000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை.

வலசை வந்து ஏப்ரல் மே ஜூன் ஜூலை மாதம் வரை தங்கி குஞ்சு பொரித்து பிறகு அவற்றுடன் பறந்து செல்கின்றன.23 க்கும் மேற்பட்ட பறவைகள் இனங்கள் இங்கு வந்து கூடு கட்டுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர். இதில் நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட வலசை பறவையினங்கள் காணப்படுகின்றன.

இதேவேளை ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ், நைஜரியா, சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: