தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – இ.போ.ச ஊழியர்கள்!

Saturday, February 4th, 2017

தமது நியாயமான கோரிக்கைக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரை போராட்டம் தொடருமென வடபிராந்திய போக்குவரத்து சபை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மத்திய பேருந்து நிலையம் தனியாருடன் இணைக்கப்பட்டமை, பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையைக் கண்டித்து வடக்கு தழுவிய ரீதியில் இ.போ.ச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த போராட்டம் நேற்று 2ஆவது நாளாகவும் நீடித்த நிலையில் தமது போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என நேற்று யாழ்.மாவட்ட இ.போ.ச ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் தொடர்பில் வடக்கு ஆளுநர் உட்பட பல அரசியல் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் வருமாறு,

இ.போ.ச வடபிராந்திய சாலைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாது சுய இலாபம் கருதி கருத்துக்களை வெளியிடும், தீர்மானங்களை இயற்றியும் தன்னிச்சையாக நிறைவேற்றும் வடமாகாண சபையின் போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சரை பதவி விலக்க வேண்டும். இ.போ.ச வவுனியா பேருந்து நிலையத்தை எமக்கு மீளவும் பெற்றுத்தர ஆவண செய்ய வேண்டும். இவற்றுக்கான தீர்வு கிகடக்கும் வரை தொடர்ச்சியாக எமது பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும். எமது போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரச, அரச சார்பற்ற உழியர்கள், மாணவர்கள், பருவகால சீட்டுப் பெற்றோர் பொதுமக்கள் என அத்தனை பேரின் சிரமங்களுக்காக மனம் வருந்துகின்றோம். எதிர்காலத்தில் எமது போராட்டங்களுக்கு ஆதரவாக வடக்கில் வர்த்தக சங்கங்களின் ஆதரவையும் கோர முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

unnamed__12_

Related posts:


வீணைக்கு அளிக்கின்ற வாக்கு ஒருபோதும் வீணாகாது என்பதை வரலாறு நிரூபித்துக் கொண்டிருக்கிறது - இந்து மத ...
சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் – மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கான உணவும் கைய...
இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு புதிய வீடுகள் - 317 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தவல...