தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

Wednesday, November 30th, 2016

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை குறித்த வேலை நிறுத்த போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் எனவும், இதனால் பாதிக்கபடும் நோயாளிகள் குறித்து தாம் கவலையடைவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாளை காலை இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவீன் டி சொய்சா கூறினார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

தமது பிரச்சினைகள் குறித்து சுகாதார அமைச்சர் மற்றும் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்ததாகவும், அதன்மூலம் எமது பிரச்சினைகள் குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்த தவறியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

எவ்வாறாயினும் தமது பிரதான கோரிக்கைகள் தொடர்பாக திட்டவட்டமான தீர்வு ஒன்று கிடைக்கவில்லை என்றும், அதன் காரணமாக வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்க வேண்டி உள்ளதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகளிர் வைத்தியசாலைகள்,  சிறுவர் வைத்தியசாலைகள், புற்றுநோய், சிறுநீரக நோய் மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் நிலையங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இயங்குவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச சேவை மற்றும் இலவச சுகாதார சேவை ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்தே, இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ggg

Related posts: