தீர்வு கிடைக்கவில்லை – போராட்டம் தொடர்கிறது!

பல்கலைக்கழக தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழுவின் இணைத்தலைவர் எடவட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
வேதன கொடுப்பனவு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தெளிவான தீர்வு கிடைக்கவில்லை என்றதன் அடிப்படையில் பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த தொழிற்சங்க போராட்டம் 17 நாட்களாக தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமையால் பல்கலைக் கழகங்களினது செயற்பாடுகள் முடக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அடைமழையால் பாதிக்கப்பட்ட வடமராட்சியின் நிலைமைகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் விசேட குழுவினர் பார்வை! (...
நாட்டின் நீர் மின் உற்பத்தி 10 வீதமாக குறைவடைந்துள்ளது - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு!
தாமரைக் கோபுரத்தை பார்வையிட நேற்று 2612 பேர் வருகை - முதல் நாளிலேயே 15 இலட்சம் வருமானம் எனவும் தெரி...
|
|