தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வரிடமா!

Saturday, June 17th, 2017

வட மாகாண சபை விவகாரத்தில் தீர்மானம் எடுக்கும் முழு அதிகாரத்தையும் முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வட மாகாண ஆளுநர் ரெஜினோலட் குரேயிடம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடமாகாணத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலமை குறித்து மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு ஆளுநர் கொண்டு சென்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஊழல் மோசடிக்கு எதிராக செயற்படுவது நல்லாட்சியின் கோட்பாடு என்பதால் வடமாகாண சபை தொடர்பில் முடிவெடுக்கும் விவகாரத்தை முதலமைச்சரிடம் விட்டுவிடுமாறு அவர் கூறியுள்ளார்.அத்துடன் முதலமைச்சரின் தீர்மானத்தில் மத்திய அரசு தலையிடுவது முரண்பாடாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார் .

Related posts: