தீர்மானங்கள் இவ்வாரம் அறிவிக்கப்படும் : அமைச்சர் ராஜித தெரிவிப்பு!
Monday, January 23rd, 2017
நாட்டு மக்கள் நன்மையடையக் கூடிய வகையிலான தீர்மானங்கள் சிலவற்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இவ்வாரம் அறிவிப்பார்” என, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இரத்தப் பரிசோதனை மற்றும் ஏனைய பரிசோதனைகளை தனியார் பிரிவின் ஊடாக செய்யமுடியாது என, ஜனவரி 1ஆம் திகதி முதல் தடையை விதித்தேன். அது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மட்டுமல்ல, நாடளாவிய ரீதியில் உள்ள சகல வைத்தியசாலைகளிலும் அமுல்படுத்தப்படும்” என்றார்.
“இரத்தப் பரிசோதனைகள், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மட்டும் கடந்த சில தினங்களில் மட்டும் 50 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. இந்த தீர்மானத்துக்கு எதிராக, நாசகார வேலையைச் செய்வதற்கு சிலர் முயன்றனர். அது ஏன், வியாபார மாஃபியா என்பதனாலாகும். அந்த வியாபார மாஃபியாவுக்கு நான் ஒரு போதும் அஞ்சமாட்டேன்” என்றார்.
Related posts:
|
|