தீர்மானங்களைச் செயற்படுத்துவதில் தவிசாளருக்பு ஆர்வம் கிடையாது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் குற்றச்சாட்டு!

வலி.கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயற்படுத்துவதில் தவிசாளர் ஆர்வம் காட்டவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் ஐங்கரன குற்றம் சாட்டியுள்ளார்.
பிரதேச சபையில் பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் தவிசாளரே அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அக்கறை காட்டவேண்டுமெனத் தெரிவித்தார். தீர்மான இல 45, மதுபானசாலையின் வியாபார உரிமம் இரத்தாக்கல்.
இத் தீர்மானம் 14.06.2018 அன்று சபையில் நிறைவேற்றப்பட்ட போதும் குறித்த மதுபானசாலை வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இந்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மதத்தலம், பாடசாலை, சந்தைத் தொகுதி என்பன காணப்படுகின்றமையால் குறித்த தீர்மானம் தொடர்பில் தவிசாளர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
தீர்மான இல 13, போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 29.10.2018 அன்று பாடசாலைகள், பொது இடங்களுக்கு அருகாமையில் (500மீ) விற்பனை செய்வதைத் தடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
தீர்மான இல 09, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் வெடி கொளுத்துவதற்கெதிரான தீர்மானம் 28.11.2018 நிறைவேற்றப்பட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவித்தார்.
எனவே பிரதேச சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் நோக்கத்தை அனைவரும் புரிந்துகொண்டு மக்களுக்காகச் செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|