தீப்பற்றிய கப்பலிலிருந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலருக்கு ஒவ்வாமை – கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு!

Friday, May 28th, 2021

தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய பொருட்களை தொட்ட சிலர் வெவ்வேறு ஒவ்வாமைகளுக்கு ஆளாகி உள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேல் திசையில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில், தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் தொடர்ந்தும் தீ பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை, துறைமுக அதிகார சபை உள்ளிட்ட தரப்பினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீப்பற்றியுள்ள எக்ஸ்-பிரெஸ் பேர்ல் கப்பலில் இருந்து கடலில் வீழ்ந்து கரையொதுங்கிய இரசாயன மற்றும் ஏனைய பொருட்கள் வத்தளை – ப்ரீதிபுர முதல் நீர்கொழும்பு வரையான கடற்கரையில் கரையொதுங்கின. அதனை சிலர் சேகரித்து சென்றிருந்தனர்.

இதனையடுத்து, அவ்வாறன பொருட்களை தொடவேண்டாம் என கடல்சார் சமுத்திர பாதுகாப்பு அதிகாரபை, பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறி குறித்த பொருட்களை சேகரித்த 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts: