தீபாவளியை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் – ஆடைக் கொள்வனவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை !

Sunday, November 12th, 2023

தீபாவளியை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் உள்ள ஆலயங்களில் இன்று விசேட பூஜைகள் நடைபெற்றன.

வரலாற்று சிறப்புமிக்க நல்லைக்கந்தன் ஆலயம் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் ஆகியவற்றில் தீபாவளி விசேட பூஜைகள் நடைபெற்றன.

தீபத்திருநாளை மக்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருவதுடன், ஆலயங்கள் தோறும் பூஜை வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. இந்த விசேட பூஜைகளில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் தீபாவளி பண்டிகையின் போது ஆடைக் கொள்வனவு உள்ளிட்ட பல விடயங்களில் ஆர்வம் காட்டவில்லை என வியாபாரிகள் கவலை தெரிவித்துளள்மை குறிப்பிடத்தக்கது

000

Related posts: