“தீடையில்” தங்கியிருந்து தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் -ஈ.பி.டி.பியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் குரூஸ் கோரிக்கை!

கடற்றொழிலுக்கு அனுமதி மறுக்கப்படும் தலைமன்னார் பகுதி கடற்றொழிலாளர்களுக்கு “தீடையில்” தங்கியிருந்து தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் மன்னார் பிரதேச சபைக்கு தெரிவான கௌரவ உறுப்பினர் ப.சகாயநாதன் குரூஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னார் பிரதேச சபையின் கன்னி அமர்வு கடந்த கடந்த 10 ஆம் திகதி தவிசாளர் முஜாஹிர் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில் –
கீரி மற்றும் தாழ்வுபாடு ஆகிய கிராமங்களின் எல்லைப் பகுதியை பிரதேச சபை மற்றும் நகரபை ஆகியன சுமுகமானமுறையில் அடையாளமிட்டு குறித்த பகுதியின் எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும்.
அத்துடன் நீண்டகால பிரச்சினையாக காணப்படும் தாழ்வுபாடு 50 வீட்டுத் திட்டப் பகுதிக்கான உள்ளக வீதிகள் அமைக்கப்படவேண்டும் என்பதுடன் குறித்த பகுதியில் வீதி மின் விளக்குகள் பழுதடைந்துகாணப்படுவதாகவும் அவற்றை சீரமைத்து மக்களது இயல்பு வாழ்வுக்கு வழிவகை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் தனது கன்னியுரையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|