திஸ்ஸவின் பிணை கோரிக்கையை நீதிமன்று நிராகரித்தது!

Friday, November 4th, 2016

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் பிணை தொடர்பான கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் பொது வேட்பாளராக களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அது தொடர்பிலான போலி ஆவணங்களை வௌியிட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்படி கைதுசெய்யப்பட்ட திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

419503783Untitled-1

Related posts: