திவிநெகுமவை மீண்டும் சமுர்த்தியாக மாற்ற அனுமதி!

Wednesday, October 19th, 2016

திவிநெகுமவுக்கு பதிலாக சமுர்த்தி எனும் பதத்தை உபயோகிப்பது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

திவிநெகும எனும் பதத்திற்கு பதிலாக சமுர்த்தி எனும் பதத்தை உபயோகிக்கும் வகையில் 2013ஆம் ஆண்டின் 01ம் இலக்க திவிநெகும சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அதனை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனைக்கே இவ்வாறு அனுமதி கிட்டியுள்ளது.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க இதனை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

46565

Related posts: