தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை!

Tuesday, November 29th, 2016

நீண்டகாலமாக  திருத்தப்படாது குன்றும் குழியுமாக காட்சியளிக்கும் தில்லைக்காளி அம்மன் கோவில் வீதியை  புனரமைத்துத் தருமாறு கோண்டாவில் வடகிழக்கு பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுததுள்ளனர்.

நேற்றையதினம் கோண்டாவில் வடகிழக்கு சனசமூக நிலையத்தில் குறித்த நிலைய தலைவரால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்துகொண்டு மக்களத குறைநியைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட  ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனிடமே குறித்த கோரிக்கையை குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினர் முன்வைத்துள்ளனர்.

29.11

வடந்தவருடம் நல்லூர் பிரதேச சபையினால் குறித்த வீதி புனரமைப்பிற்கான நிதி ஒதுக்கப்பட்டதாகவும் அதற்கான நடவடிக்கைகளை பிரதேச சபை மேற்கொண்டதாகவும் தெரிவித்த மக்கள் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இன்றுவரை குறித்த வீதி புனரமைப்பு கைவிடப்பட்டுள்ளதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் தமது பகுதி சனசமூக நிலையத்தின் கட்டிட புனரமைப்பிற்கு நிதியுதவியைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

29.11.1

மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்துகொண்ட இரவீந்திரதாசன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கு குறித்த கோரிக்கைகளை கொண்டு சென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக உறுப்பினர்கள் பிரதீபன், வீரசிங்கம் செய்யொன், ஜெதீஸ்வரி மற்றும் தயாழினி ஆகியோர் உடனிருந்தனர்

Related posts: