திறைசேரியின் வருமானத்தை விட செலவு அதிகம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!
Wednesday, January 18th, 2023திறைசேரிக்கு 147 பில்லியன் ரூபா வருமானம் கிடைத்ததாகவும் ஆனால் செலவுகளுக்காக 154 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, வரலாற்றில் முதல்தடவையாக அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு உரிய திகதியில் மாதாந்த வேதனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமுர்த்தி நிதியம் இருப்பதன் காரணமாக சமுர்த்தி கொடுப்பனவை அரசாங்கம் தாமதிக்க முடியாது என சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குருதி சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு உதவுங்கள் - சாவகச்சேரி வைத்தியசாலை நிர்வாகம் பொது அமைப்புகள...
மக்களுடைய பணத்தைப்பெற்றுக்கொண்டு அவர்களை ஏமாற்றினார் என்ற குற்றச்சாட்டு - வவு. நிதி நிறுவனத்தின் மு...
கொரோனா பரவல் தொடர்பில் புதிய தகவல் - வுஹான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!
|
|