திறக்கப்படுகிறது பேலியகொடை புதிய மெனிங் சந்தை !

Monday, December 14th, 2020

பேலியகொடை புதிய மெனிங் சந்தை இன்று திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது. இதற்கமைய வர்த்தக நடவடிக்கைகளுக்காக இன்று பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை திறக்கப்படவுள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் விவசாய விளைபொருட்களை அந்த நாளில் கொண்டு வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தமாக அனுப்ப வேண்டாம் என்றும் சாதாரண அளவை அனுப்புமாறு அனைத்து விவசாயிகளிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமக்கு அண்மையில் மீன் சந்தை உள்ளதால் குறித்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

.

Related posts: