திறக்கப்படாதுள்ள உணவகங்களை திறப்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை தருமாறு சுகாதார அதிகாரிகளிடம் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க கோரிக்கை!

Wednesday, May 20th, 2020

கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை திறக்கப்படாதுள்ள உணவகங்களை எதிர்வரும் வாரத்தில் திறப்பதற்கு அவசியமான சுகாதார வழிகாட்டல்களை விரைவாக வழங்குமாறு சுகாதார பிரிவு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையை அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க இந்த விடுத்துள்ளார்.

கொரோனா தொற்று நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் நாட்டின் இயல்பு நிலையும் படிப்படியாக திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளன.

ஆனாலும் சுகாதார நடைமுறைகளை பேணுவதில் இடர்பாடுகளை எதிர்கொள்ளக் கூடியதாக உள்ள சில நடவடிக்கைகளுக்கு சுகாதார தரப்பு இன்னமும் முழுமையான அனுமதியை வழங்காதுள்ளது.

இதில் உணவகங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையால் அந்த வியாபார நடவடிக்கைளை தமது குடும்ப வருமானமாக கொண்டு வாழும் குடும்பங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் அத்துடன் அவர்கள் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  இந்நிலையில் இது குறித்து இடம்பெற்ற அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: