திரையரங்குகளில் தேசிய கீதம் –  தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம்!

Sunday, July 22nd, 2018

திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிட முன்னர் தேசிய கீதத்தை இசைக்கச் செய்வதை கட்டாயமாக்குமாறு பல தரப்புகளிலிருந்து கோரிக்கை வந்துள்ளதாக தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

திரைப்படங்களை விநியோகம் செய்யும் உரிமை நீதிமன்றத்தின் ஊடாக திரைப்படக் கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்த பின்னர் அதனை கட்டாயமாக்க நடவடிக்கை எடுப்பதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர்.அபேவர்தன தெரிவித்தார்.

பாரம்பரிய ரீதியாக சில திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவதுடன் சில திரையரங்குகளில் அது இடம்பெறுவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.  விநியோக உரிமை கிடைத்த பின்னர் திரைப்படங்களை திரையிட முன் தேசிய கீதத்தை இசைக்க செய்வதை கட்டாயமாக்குவதாக திரைப்பட கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் எம்.என்.ஆர்.அபேவர்தன தெரிவித்தார்.

Related posts: