திருலை துறைமுகம் அபிவிருத்தி சிங்கபூரிடம்?

Sunday, July 24th, 2016

திருகோணமலை துறைக அபிவிருத்தி நடவடிக்கைகள் சிங்கபூருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகிலேயே மிகப்பெரிய இயற்கைத்துறைமுகங்களில் ஒன்றாக காணப்படும் திருகோணமலை துறைமுகம் தொடர்பில் பல்வேறு நாடுகள் மத்தியில் போட்டி நிலைமைகள் காணப்படுகின்றன குறிப்பாக இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த துறைமுகத்தை தம்வசப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதாக கூறப்பட்டிருந்தது.

எனினும் இதனை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம், சிங்கபூரின் நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது பிரதமர் சிங்கபூர் சென்றிருந்த வேளையில், இதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

இந்த துறைமுகம் அமைந்துள்ள 175 சதுர கிலோமீற்றர் பரப்புள்ள பகுதி, குறித்த நிறுவனத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

Related posts: