திருமலை எரிப்பொருள் தாங்கி தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்!

Saturday, April 22nd, 2017

திருகோணமலை எரிப்பொருள் தாங்கிகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றமை குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடலொன்று இன்று இடம்பெறவுள்ளதாக பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் தெரிவிக்கின்றது.

இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடல்களை நடாத்துவதற்காக ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை பெற்றுத் தர ஏற்பாடு செய்து தருவதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.
எனினும், அவ்வாறான கலந்துரையாடலொன்றை நேற்றைய தினம் ஏற்பாடு செய்ய முடியாது என அமைச்சர் கடிதமொன்றின் மூலம் அறிவித்துள்ளதை அடுத்தே தாம் தொழிற்சங்க நடவடிக்கை குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: