திருமலையில் பரவிவரும் டெங்கு: கட்டுப்படுத்த துரித நடவடிக்கை!

Wednesday, March 22nd, 2017

திருகோணமலை மாவட்டத்தில் வேகமாக பரவ ஆரம்பித்திருக்கும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த பணிகளுக்காக 150 படையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டெங்கு நோயை ஏற்படுத்தக்கூடிய நுளம்புகள் உள்ள இடங்களை சுத்தம் செய்வதற்கு சிவில் பாதுகாப்பு படையினர் குறித்த பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை கிண்ணியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட 66 பாடசாலைகளுக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக 4 இலட்சத்து 21ஆயிரம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக கிண்ணியா கல்வி வலயப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.மாகாண கல்வித்திணைக்களத்தின் மூலம் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது. பாடசாலை சுற்றாடலை சுத்தம் செய்வது தொடர்பாக தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

வழங்கப்பட்டுள்ள நிதியைக்கொண்டு பாடசாலைகளை சுத்தம் செய்வதற்கான ஆலோசனைகளும் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: