திருமலையில் தமிழ் மக்களின் இருப்பையும் பாதுகாக்க வேண்டுமாயின் தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ஸ்ராலின் தெரிவிப்பு!

Sunday, May 31st, 2020

திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய இருப்பையும் பண்பாட்டு அடையாளங்களையும் பாதுகாக்க வேண்டுமாயின் அரசியலில் ஆள் மாற்றம் என்பதை தாண்டி தலைமை மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிழக்கு பிராந்திய அமைப்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான எம்.ஐ.ஸ்ராலின் தெரிவித்தார்.

கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கும் இடையில் நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்குறிப்பிடப்பட்ட வியடம் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திருகோணமலை மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் மேலும் கருத்து தெரிவித்த ஈ.பி.டி.பி. கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைமை வேட்;பாளர் ஸ்ராலின், கடந்த காலங்களில் திருகோணமலை மக்கள் தவறான கருத்துக்களினால் ஈர்க்கப்பட்டு தவறானவர்களிடம் அதிகாரங்களை கையளித்தமையே அந்த மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய இருப்பு தொடர்பான அச்சம் ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்ந அச்ச சூழலை தடுத்து நிறுத்த வேண்டுமாயின்,; நடைமுறை சாத்தியமான ரீதியில் உரிமைகளை வெல்லக்கூடிய தரப்புகளின் கைகளில் அதிகாரங்களை கையளிக்க வேண்டும் என்ற யதார்த்தத்தினை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கட்சி ஆதரவாளர்களிடம் வலியுறுத்தினார். தற்போது பின்பற்றப்பட்டு வருகின்ற சமூக இடைவெளி உட்பட்ட சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்ட குறித்த கலந்துரையாடலில் மட்டுப்படுத்தப்பட்ட கட்சி செயற்பாட்டாளர்களின் பங்களிப்போடு நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் நடாளுமன்றத் தேர்தல் தொடர்பான கட்சிச் செயற்பாடுகள் உட்பட பல்வேறு விடயங்கள் கலந்துரையடப்பட்டிருந்தமை குறிப்பிடத்;தக்கது.

Related posts: