திருமலையில் அடைமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Friday, November 9th, 2018

தொடரும் அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடித் தேவையான உணவுப் பொதிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வழங்கிவைத்துள்ளது.

அடைமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேசத்திற்குட்பட்ட சோலையடி, ஆனந்தபுரி, சம்பியன்தோட்டம், அலஸ்தோட்டம் போன்ற கிராமங்களில்  வாழும் மக்களின் குடிமனைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மதிய உணவு  பொதியினை திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் பாலகணேசன் தலைமையிலான கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வழங்கி வைத்தனர்.

2

1

3

Related posts: