திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்றுமுதல் நடைமுறையில் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று 5 ஆம் திகதிமுதல் அமுல்படுத்தப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
புதிய கட்டணங்களுக்கு அமைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 14 ரூபாவிருந்து 17 ரூபா வரை அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்கள்யாவும் கடந்த 29 ஆம் திகதி, 17.44 வீதத்தால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிணங்க சொகுசு மற்றும் அரை சொகுசு பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என நிலான் மிரண்டா கூறியுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை பேருந்தில் காட்சிப்படுத்துமாறும் அனைத்து பேருந்து ஊழியர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின் 1955 எனும் இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பேருந்துகளில் உள்ள பயணச்சீட்டு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளமையால் சுமார் ஒரு மாத காலத்திற்கு பயணச்சீட்டினை வழங்க முடியாது எனவும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|