திருட்டு மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி வாள்வெட்டு வன்முறை – யாழில் ஐவர் கைது!

Sunday, May 22nd, 2022

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த அளவெட்டி கனி என்றழைக்கப்படுபவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தியே இந்த வாள்வெட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரே இந்தக் கைது நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்.

கடந்த 17 ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் சண்டிலிப்பாய் தொட்டிலடிச் சந்தியில் இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் அளவெட்டியைச் சேர்ந்த ஏ. ரதீஸ்வரன் என்பவரே தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

03 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் கீழான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதனடிப்படையில் கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த இருவர், தெல்லிப்பழையைச் சேர்ந்த இருவர் மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் என ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் வடமராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் திருட்டு மற்றும் கொள்ளையிடப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பால் உற்பதத்தி மேம்படுத்தப்படும் - ஜ...
அடுத்த மாதம்முதல் உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம் - உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்...
கொரோனா அச்சுறுத்தலால் முடக்கப்பட்ட தீவகத்தின் பல பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு ஈ.பி.டி.பியினரால் உ...