திருட்டு மின் பாவனை – மக்களிடம் உதவி கோரும்  மின்சக்தி அமைச்சு!

Saturday, April 2nd, 2016

சட்ட விரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுக் கொண்டமை சம்பந்தமாக கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 90 இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகையை வருமானமாக பெற்றுக் கொள்ள முடிந்ததாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்வாசிப்பு மானியை மாற்றுதல், கொக்கிகள் பயன்படுத்தி மின்சாரத்தை பெற்றுக் கொள்ளல் போன்ற சட்டவிரோத மின்சார பயன்பாடு சம்பந்தமாக 223 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிய வந்துள்ளதுடன்,இவற்றில் மோசடியான முறையில் மின்மானியை பயன்படுத்தி மின்சாரம் பெற்றுக் கொண்ட சம்பவங்கள் 161 பதிவாகியுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பயன்படுத்தும் சம்பவங்கள் குறித்து தெரிந்திருந்தால் 011 2 242 2 259 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத் தருமாறு மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: