திருட்டில் ஈடுபட்ட சிறுவனுக்கு யாழ். நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு!

Friday, February 15th, 2019

திருட்டுக்களில் ஈடுபட்டு வந்த சிறுவனை ஒரு ஆண்டுக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் சேர்த்து மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போல் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் 16 வயதுடைய சிறுவனை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.

திருட்டுப் போன பொருட்கள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டிருந்தனர்.

அந்தச் சிறுவனுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அவரை ஒரு வருடத்துக்கு அச்சுவேலி அரச சீர்திருத்தப் பாடசாலையில் அனுமதித்து மறுவாழ்வு வழங்குமாறு உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு ஒரு வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts: