திருடர்களால் முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை – கொடிகாம் அல்லாரை பகதியில் சம்பவம்!

Monday, April 12th, 2021

தென்மராட்சி பிரதேசத்தில் தீருடச் சென்ற கும்பலினால் வயோதிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொடிகாம் அல்லாரை பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் 3 பேர் கொண்ட கொள்ளையர்களால் குறித்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது..

திருடச் சென்ற குறித்த கொள்ளையர்கள் வயோதிப தம்பதியை கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதன்போது 72 வயதான சிவராசா என்பவர் கொல்லப்பட்டுள்ளார்.

சத்தம் கேட்டு அயலிலுள்ள இளைஞர்கள் சிலர் சம்பவ வீட்டுக்கு சென்ற வேளையில், கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பிறப்பு இறப்பு மற்றும் மரண சான்றிதழ்களில் தவறுகள் ஏற்படுமாயின் குறித்த...
மூன்று முன்னாள் தளபதிகளுக்கு உயர்மட்ட இராஜதந்திர பதவி - நாடாளுமன்ற உயர் பதவிகள் குழு அங்கீகாரம்!
நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் - வளிமண்டலவியல் திணைக...